ஒரே நாளில் 65,000 கோடி இழப்பு! பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை இழந்த மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரராக முடிசூட்டப்பட்ட 48 மணிநேரத்தில் எலான் மஸ்க் மிகப்பெரிய இழப்பை சந்தித்ததால் மீண்டும் முதலிடத்தை தவறவிட்டார்.
ஒரே நாளில் ரூ 65,000 கோடி இழப்பு
உலகின் மிகப் பெரிய பணக்காரராக முடிசூட்டப்பட்ட 48 மணிநேரங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோடீஸ்வரரான எலான் மஸ்க், ஒரே நாளில் $1.9 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 65000 கோடிகள்) மதிப்புள்ள சொத்துக்களை இழந்ததால், மீண்டும் அந்தத் தகுதியை இழந்தார், இதனால் அவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதேநேரம், ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸின் படி, LVMH என்ற ஆடம்பரப் பொருட்களின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) சொத்து சுமார் $2 பில்லியனுக்கு உயர்ந்த பின்னர் உலகின் பணக்காரர்களின் தரவரிசையில் இடம்பிடித்தார்.
மஸ்கின் சொத்து மதிப்பு
இப்போது, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 184 பில்லியன் டொலராகக் கணிக்கப்பட்டுள்ளது, மறுபுறம் அர்னால்ட்டின் மதிப்பு 186 பில்லியன் டொலராக உள்ளது.
புதன்கிழமையன்று டெஸ்லா பங்குகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததன் விளைவாக மஸ்க்கின் நிகர மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக ஃபார்ச்சூன் தெரிவித்துள்ளது. இதுவே, இது பிரெஞ்சு சொகுசு பிராண்டான LVMH-ன் தலைமை நிர்வாக அதிகாரி முதலிடத்தை பெற அனுமதித்தது.
Getty Images
டெஸ்லாவின் 2023 முதலீட்டாளர் தினத்தால் வர்த்தகர்கள் ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து, டெஸ்லாவின் பங்குகள் சரிந்தது.
எனினும், விலைக் குறைப்பு மற்றும் சாதகமான வரிக் கடன் மாற்றங்கள் காரணமாக அமெரிக்காவில் மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட தேவையைத் தொடர்ந்து டெஸ்லா பங்கு இந்த ஆண்டு இதுவரை 65 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.