எதிர்மறை கருத்துக்கள் நல்லது! ட்விட்டரில் ப்ளாக் செய்த அனைவரையும் அன் ப்ளாக் செய்த எலான் மஸ்க்!
எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரையும் அன் ப்ளாக் செய்துள்ளார். மேலும் நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் எதிர்மறை கருத்துகள் நல்லதென ட்விட் செய்துள்ளார்.
எதிர் மறை கருத்துகள் நல்லது
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ப்ளாக் செய்து வைத்திருந்த அனைவரையும் அன்பிளாக் செய்துள்ளார்.
மேலும் நம்மை பற்றிய எதிர்மறை கருத்துக்கள் எப்போதும் நல்லது, நீங்களும் என்னைப் போலவே செய்யுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்குப் பலரும் அவரை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
I have unblocked everyone I blocked, apart from scammers. I recommend others do the same.
— Elon Musk (@elonmusk) February 24, 2023
Negative feedback is a good thing.
இதற்கு முன்பாக எலான் மஸ்க் ஒரு ட்விட்டில் தான் தேவையில்லாமல் பின்னூட்டம் செய்த பலரை ப்ளாக் செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் பல மாற்றங்கள்
தற்போது எலான் மஸ்க்கின் ட்விட்டர் பக்கம் Shadow banning செய்யப்பட்டுள்ளன. Shadow banning என்பது பயனர்களின் பதிவுகள் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும், ட்விட்டர் பதிவுகள் சிலருக்கு அறிவிப்பு தராமல் பதிவிட முடியும் என்பதாகும்.
கடந்த ஆண்டு மைக்ரோ பிளாக்கிங் தளத்தை மஸ்க் வாங்கியதிலிருந்து, அவர் தனது சொந்த ட்விட்டர் கணக்கு உட்பட எல்லாவற்றிலும் பல மாற்றங்கள் செய்து வருகிறார்.
@Jonathan Ernst/Reuters
எலான் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தை 24 மணி நேரம் முடங்கி, ஒரு ட்விட்டர் பக்கத்தின் தனி உரிமை எந்த அளவு பாதிக்கிறது என்பதைப் பரிசோதித்து, அதில் சில மாற்றங்களைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.