பரபரப்பான சூழலில் இஸ்ரேல் சென்றடைந்த எலான் மஸ்க்! காரணம் என்ன?
உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் இஸ்ரேல் சென்று பணயக்கைதிகளின் நிலை மற்றும் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு குறித்து விவரிக்க உள்ளார்.
இஸ்ரேல் பயணம்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் மஸ்க் இஸ்ரேலின் டெல் அவிலில் சென்றடைந்துள்ளார். அங்கு அவர் இஸ்ரேலிய தலைவர்களை சந்திக்கிறார்.
பணயக்கைதிகளின் அவலநிலை
இந்த சந்திப்பில், போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் உள்ள பணயக்கைதிகளின் அவலநிலை, அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக எலான் மஸ்க் யூத சமூகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். அத்துடன் அவர் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து ட்விட்டரில் பரவும் தவறான தகவல்கள், வீடியோக்களை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Fadel Senna/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |