காசாவில் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்ததால் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு: அவள் தந்தை யார் தெரியுமா?
காசாவில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் 50 நாட்கள் பிணைக்கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஒருத்தி, பேசுவதற்கு பதிலாக மிக மெல்லிய குரலில் கிசுகிசுக்க மட்டுமே செய்கிறாள்.
காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்ததால் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
அட்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒன்பது வயதுச் சிறுமியான எமிலியும் (Emily Hand) ஒருத்தி.
50 நாட்கள் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்த எமிலி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாள். ஆனால், அவள் முன்போல் பேச மறுக்கிறாள். பேசுவதற்கு பதிலாக அவள் மெல்லிய குரலில் கிசுகிசுக்கவே செய்கிறாள்.
thesun
அவளது தந்தையான தாமஸ் (Thomas Hand, 63), ஒன்பது வயதில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டு, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தொடர்ச்சியாக மாற்றப்பட்டுக்கொண்டே இருந்ததால், தன் மகள் எலிலி அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
மேலும், காசாவில் இருக்கும்போது, பேசினால் வெளியே இருக்கும் இஸ்ரேல் படைகளுக்குக் கேட்டுவிடும் என்பதால், ஹமாஸ் குழுவினர் குழந்தைகளை அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டிருக்கலாம் என்றும், அதனால் பிள்ளைகள் பயந்து பேசுவதையே நிறுத்தியிருக்கலாம் என்றும் தாமஸ் கருதுகிறார்.
thesun
அவள் கண்களில் எப்போதும் ஒரு ஒளி இருக்கும், அவளது கன்னங்கள் மொழுமொழுவென்று இருக்கும் என்று கூறும் தாமஸ், இப்போது அவள் மெலிந்து ஆளே மாறிபோய்விட்டாள் என்கிறார்.
எமிலி, காசாவில் இருக்கும்போது தனது 9ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். இப்போது, அவளுக்கு ஊடகவியலாளர்களும், அவளது தந்தையும் பிறந்தநாள் பரிசுகள் கொடுத்துள்ளார்கள்.
Credit: Doug Seeburg
இந்த தாமஸ் யார் தெரியுமா?
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்து, ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றபோது, ’தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை: அதிர்ச்சிப் பின்னணி’ என்றொரு செய்தி வெளியானது.
அப்போது, என் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று கூறியிருந்தார் தாமஸ்.
thesun
தான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்று கூறியிருந்த தாமஸ், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்றும் கூறியிருந்தார்.
அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்று கூறியிருந்தார் அவர்.
Credit: Doug Seeburg
ஆனால், பிறகுதான் தெரிந்தது தாமஸின் மகள் எமிலி கொல்லப்படவில்லை, அவள் காசா சுரங்கப்பாதைகளில் பிணைக்கைதியாக இருக்கிறாள் என்பது.
அதேபோல, குழந்தை எமிலி விடுவிக்கப்பட்டபோதும், அவல் தன் தந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறாள். காரணம், அவள், தன் தந்தையும் எங்கேயோ பிணைக்கைதியாக இருக்கிறார் என்றே அவள் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறாள்.
Credit: AP
ஆனால், தாமஸ் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்படவில்லை. எமிலியின் தாயாகிய Liat, எமிலிக்கு இரண்டு வயது இருக்கும்போதே புற்றுநோயால் மரணமடைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |