அமெரிக்கா நோக்கிப் படையெடுக்கும் காலியான எண்ணெய் கப்பல்கள்: ட்ரம்ப் பெருமிதம்
பிற நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக, பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை நோக்கி
இது தொடர்பில் தமது ட்ரூத சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், உலகிலேயே மிகப்பெரிய கப்பல்களில் சிலவாகக் கருதப்படும், முற்றிலும் காலியான பெருமளவிலான எண்ணெய் கப்பல்கள், உலகின் மிகச்சிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொள்வதற்காக, தற்போது அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கி, பின்னர் ஈரானியப் படைகள் அருகிலுள்ள நாடுகளைத் தாக்கத் தொடங்கியதால் விரிவடைந்த போர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக,
மூத்த அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களைச் சந்தித்த வேளையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்திற்காகப் பெரும்பாலும் முடக்கப்பட்டு, வரலாற்றிலேயே உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக மோசமான இடையூறை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
தேவை அதிகரிக்கக்கூடும்
தற்போது அமெரிக்க எண்ணெய், உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெயை விட அதிக விலையில் வர்த்தகமாகிறது. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 96.57 டொலராக நிலைபெற்றது, அதே நேரத்தில் பிரென்ட் 95.20 டொலராக இருந்தது.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், பொதுவாக அமெரிக்க எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், காலியான கப்பல்கள் எண்ணெய்க்காக அமெரிக்காவுக்குச் செல்கின்றனவா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்கவும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, எண்ணெய் கப்பல்கள் அமெரிககாவை நாடுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளது, ஒரு அமெரிக்கக் கண்ணோட்டத்தில் இது சிறப்பான தருணம் என குறிப்பிட்டுள்ள இன்னொரு பொருளாதார நிர்வாகி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |