வரலாற்று சாதனை... ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு: கடும் வீழ்ச்சியடைந்த பணமதிப்பு
துருக்கியின் ஜனாதிபதியாக எர்டோகன் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அங்குள்ள பணமதிப்பு கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கிய லிரா வீழ்ச்சி
ஆட்சி காலத்தின் மூன்றாவது தசாப்தத்தில் துருக்கி எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களின் புதுதிய அடையாளமாக இந்த வீழ்ச்சியை பார்க்கின்றனர். ஜனாதிபதி எர்டோகன் வெற்றியை அறிவித்த சில நிமிடங்களில் டோலருக்கு எதிராக துருக்கிய லிரா வீழ்ச்சியடைந்தது.
@AP
அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி திங்கள்கிழமை காலை குறிப்பிடுகையில், இந்த ஆண்டு துருக்கிய நாணயம் மேலும் சரிவடையும் என்று கணித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றிய எர்டோகன், தனது வழக்கத்திற்கு மாறான பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர இருப்பதாக உறுதியளித்தார்.
மேலும், ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று தமது ஆதரவாளர்களுக்கு இலவச சமையல் எரிவாயு திட்டத்தையும் முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, வட்டி விகிதங்களைக் குறைப்பது பணவீக்கத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக குறைக்கும் என்றே எர்டோகன் நம்பி வருகிறார்.
எதிர்வரும் நாட்களில் தீவிர கவனம்
மேலும், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் நலத்திட்டங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வது உள்ளிட்டவை எதிர்வரும் நாட்களில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்றார்.
AFP
இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பது தங்கள் அரசாங்கத்திற்கு எளிதான வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையை தொடர இருப்பதாக எர்டோகன் உறுதியளித்தார்.