அவர்களுக்கு எதிராக இந்த நாடுகளின் கூட்டணி அமைய வேண்டும்: துருக்கி ஜனாதிபதி அழைப்பு
இஸ்ரேலில் இருந்து வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட துருக்கிய - அமெரிக்க பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய எர்டோகன், கூட்டணி தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவம் அவரை கொலை செய்துள்ளதை பாலஸ்தீனம் மற்றும் துருக்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலிய ஆணவத்தையும், இஸ்ரேலிய கொள்ளையடிப்பையும், இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தையும் தடுக்கும் ஒரே நடவடிக்கை இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிதான் என எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கொடூரத்திற்கு எதிராகவே எகிப்து மற்றும் சிரியாவுடன் துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டதாக எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். நீண்ட 12 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக எகிப்து ஜனாதிபதி ஒருவர் துருக்கியில் விஜயம் செய்துள்ளார்.
உறவு மேம்படுத்துவது குறித்து
துருக்கி சென்றிருந்த எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன் காஸா போர் தொடர்பிலும், தங்கள் இரு நாடுகளின் உறவு மேம்படுத்துவது குறித்தும் எர்டோகன் விவாதித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் எர்டோகன் வெளியிட்ட அறிக்கையில், சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத் எப்போது வேண்டுமானாலும் துருக்கி வரலாம் என்றும் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க துருக்கி தயார் என்றும் அறிவித்திருந்தார்.
2011ல் சிரிய உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு துருக்கி சிரியா உடனான உறவுகளைத் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |