வருத்தமான ஆச்சரியம் ஒன்றும் இல்லை: ரஷ்ய எரிவாயு நிறுத்தம் குறித்து ஐரோப்பா கருத்து!
நோர்ட் ஸ்ட்ரீம் 1 சரிசெய்யப்படும் வரை எரிவாயு நிறுத்தம் தொடரும்.
ரஷ்யாவின் நடவடிக்கையில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கருத்து.
இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் காஸ்ப்ரோமின்(Gazprom) நடவடிக்கையில் ”வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை” என ஐரோப்பிய கவுன்சலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையின் விளைவாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதிக்கும் மேலாக குறைத்தது.
Gazprom’s move is sadly no surprise.
— Charles Michel (@CharlesMichel) September 2, 2022
Use of gas as a weapon will not change the resolve of the EU.
We will accelerate our path towards energy independence.
Our duty is to protect our citizens and support the freedom of #Ukraine @ZelenskyyUa
அத்துடன் இயற்கை எரிவாயு விற்பனையில் பல புதிய நிபந்தனைகளையும் விதித்தது.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நோர்ட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) பைப்லைனில் உள்ள டர்பைன் பிழை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அவை சரி செய்யப்படும் வரை இயற்கை எரிவாயு நிறுத்தம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இயற்கை எரிவாயு வழங்கலை நிறுத்தும் ரஷ்யாவின் இந்த செயலில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை என ஐரோப்பிய கவுன்சலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
TASS
மேலும் எரிவாயுவை ஆயுதமாக பயன்படுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியை மாற்றாது, விரைவில் சுகந்திரமான எரிசக்தி திட்டத்தை நோக்கிய பாதையில் எங்களுடைய வேகத்தை கூட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய லாட்டரியில் £110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்: அதிர்ஷ்டசாலி யார்?
அத்துடன் எங்களுடைய முக்கிய பணி எங்களுடைய மக்களை பாதுகாப்பது மற்றும் உக்ரைனுக்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவது எனத் தெரிவித்துள்ளார்.