உக்ரைனுக்காக அதி நவீன இராணுவ டாங்கிகளை ரகசியமாக வாங்கிய ஐரோப்பிய நாடு
பெல்ஜியம் ராணுவத்திற்கு சொந்தமான அதி நவீன Leopard 1 டாங்கிகளை உக்ரைனுக்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக ஆயுத வியாபாரி ஒருவர் தகவல் கசியவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக 49 டாங்கிகள்
ஐரோப்பிய நாடு ஒன்று இது தொடர்பில் தம்மை நாடியதாகவும், முதற்கட்டமாக 49 டாங்கிகளை வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஐரோப்பிய நாடு, இந்த வர்த்தகத்தை முன்னெடுத்துள்ளது என்பதை அவர் கூற மறுத்துள்ளார்.
மட்டுமின்றி, அந்த டாங்கிகளுக்காக அந்த ஐரோப்பிய நாடு செலவிட்ட தொகை தொடர்பிலும் தம்மால் வெளிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த டாங்கிகள் உக்ரைன் போர்க்களத்தில் பயன்பாட்டுக்கு வந்து 6 மாதங்களாகியுள்ளது எனவும் அந்த ஆயுத வியாபாரி தெரிவித்துள்ளார்.
இதே நபர், தலா 37,000 யூரோ தொகை மதிப்பில் 50 Leopard 1 டாங்கிகளை ஏற்கனவே பெல்ஜியத்திடம் இருந்து வாங்கியிருந்தார். ஆனால் அந்த டாங்கிகள் ஜேர்மனி ஆயுத வியாபாரி ஒருவருக்காக வாங்கப்பட்டது என பின்னர் தெரியவந்தது.
ஜேர்மன் ஆயுத வியாபாரி
அந்த ஜேர்மன் ஆயுத வியாபாரி பெரும்பாலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துவருபவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனிடையே, உக்ரைனை ஆதரிக்கும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் Leopard 2 டாங்கிகளை அந்த நாட்டுக்கு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. Leopard 1 டாங்கிகள் 1960 காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |