சும்மா மிரட்டிக்கொண்டிருக்கவேண்டாம்: ட்ரம்புக்கு ஐரோப்பிய தலைவர்கள் பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மீண்டும் தனது வரிவிதிப்பு மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார்.
ஆம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்புக்கு ஐரோப்பிய தலைவர்கள் பதிலடி
ஆனால், வர்த்தகம் என்பது மிரட்டிக்கொண்டிருப்பது அல்ல, அது இருதரப்பு மரியாதையை அடிப்படையாகக் கொண்டது என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அமைச்சர்களும் ட்ரம்பின் மிரட்டல் குறித்து விமர்சித்துள்ள நிலையில், பிரான்ஸ் வர்த்தகத்துறை அமைச்சரான Saint-Martin, ட்ரம்பின் மிரட்டல்களால் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
பிரச்சினைகளை பெரிதுபடுத்தக்கூடாது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களில் ஒன்று என்று கூறியுள்ள அவர், அதே நேரத்தில், பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |