6வது முறை... புடின் பதவியேற்பு விழாவை புறக்கணித்த ஐரோப்பிய நாடுகள்: பிரான்ஸ் ஆதரவு
6வது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்கும் விளாடிமிர் புடினின் விழாவினை அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்துள்ளன.
கோரிக்கையை நிராகரித்துவிட்டு
ஆனால், பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு தூதுவர்களை அனுப்புவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மத்தியில் தற்போதும் ஒருமித்த கருத்து எட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், 6வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கும் விழாவில் தாங்கள் கலந்துகொள்வதாக இல்லை என அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நாங்கள் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவும் கனடாவும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளன. பிரான்ஸ் தவிர, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்கும் முடிவில் மாற்றமில்லை
மேலும் 20 ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுக்கப்பட்டும் நிராகரிப்பதாக அறிவித்துள்ளன. பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கையில், நாங்கள் ரஷ்யா உடனோ ரஷ்ய மக்களுடனோ போர் தொடுக்கவில்லை. இதனால், விழாவில் பங்கேற்கும் முடிவில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விளாடிமிர் புடினை ரஷ்யாவின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மற்றும் சட்டபூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிப்பதற்கான எந்த சட்டபூர்வமான காரணத்தையும் உக்ரைன் காணவில்லை. என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |