ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம்: பிரித்தானியா, கனடா உடன் பேச்சுவார்த்தை
ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா மற்றும் கனடாவுடன் பாதுகாப்பு கொள்முதல் பேச்சுவார்த்தைகளை தொடங்குகிறது.
முக்கியமான ஐரோப்பிய பாதுகாப்பு திட்டத்தில் பங்கு வகிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியா மற்றும் கனடா உடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பு திட்ட (Security Action for Europe - SAFE)நடவடிக்கையில் இருநாடுகளும் இணைய வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டமானது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்த SAFE திட்டம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பு செலவினங்களுக்கான கடன்களை பெற அனுமதிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு உறவு வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடுகளும் இந்த திட்டத்தின் மூலம் ஒன்றிணைய வழிவகுக்கிறது.
பிரித்தானியா-கனடாவுடனான பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக அந்த நாடுகளின் பாதுகாப்பு தயாரிப்புகளை SAFE திட்டத்தில் சேர்ப்பதற்கான நிபந்தனைகளை வரையறுப்பதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |