ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களின் போன்களில் TikTok-ற்கு தடை
ஐரோப்பிய ஒன்றியம் (European Union) சீனாவின் சமூக ஊடகத் தளமான TikTok செயலியை அதன் ஊழியர்களின் தொலைபேசிகளில் தடை செய்துள்ளது.
TikTok-ற்கு தடை
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய ஆளும் குழுக்களின் இதேபோன்ற நகர்வுகளுக்குப் பிறகு, பணிக்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலிருந்து TikTok-ஐ அகற்றுமாறு ஐரோப்பிய பாராளுமன்றம் ஊழியர்களிடம் கூறியுள்ளது. தரவு பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சீனாவின் ByteDance நிறுவனத்திற்கு சொந்தமான TikTok ஒரு அபயகரமான செயலி என்று அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த வர்த்தக அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்காவின் மக்களவைக் கூட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளை மறுஆய்வு செய்யும் ஒரு முக்கிய குழு செயலியை எப்படிக் கையாள்வது என்பது பற்றிப் பரிசீலிக்கிறது.
அமெரிக்கா, கனடா
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்த செயலியை அடுத்தடத்து அரசாங்க அதிகாரிகளின் சாதனங்களில் தடை செய்து வருகின்றன.
அமெரிக்காவின் அனைத்து அரசாங்கச் சாதனங்களிலிருந்தும் அமைப்புகளிலிருந்தும் TikTok செயலியை நீக்க வெள்ளை மாளிகை 30 நாள் கொடுத்திருக்கிறது.
கனேடிய அரசு அதன் அரசு ஊழியர்களின் சாதனங்களில் பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை முதல் தடை செய்தது.
தகவல்களை திருட TikTok செயலியைப் பயன்படுத்தபடுவதாக எழுந்துள்ள குற்றசாட்டுகளை Bytedance நிறுவனம் நிராகரித்துள்ளது.