ரஷ்யாவின் 48,500 கோடி பணத்தை உக்ரைனுக்கு அள்ளிக்கொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய பணத்தில் ஈட்டிய வட்டியை ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பணமதிப்பில் ரூ.48,500 கோடி) உக்ரைனுக்கு உதவியாக மாற்றியுள்ளதாக ஐரோப்பிய யூனியன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் முடக்கப்பட்ட (Frozen) பணத்தின் லாபத்திலிருந்து பெறப்பட்ட பணத்தின் முதல் தவணை இதுவாகும்.
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் 225 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை முடக்கியது.
இந்த பணம் ரஷ்ய மத்திய வங்கிக்கு சொந்தமானது. இந்த ஆண்டு மே மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் ரஷ்ய பணத்தில் கிடைக்கும் வட்டியை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்டன.
இந்த பணத்தை உக்ரைன் ஆயுதங்கள் வாங்க பயன்படுத்த முடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர, ஜி7 ரஷ்யாவின் 100 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
European Union, frozen Russian assets, Ukraine, Russia Ukraine war