ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் வெற்றியை தொடர்ந்து யூரோ மதிப்பு உயர்வு., அமெரிக்க டொலர் வீழ்ச்சி
ஜேர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து யூரோ (Euro) மதிப்பு உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க டொலர் (US Dollar) வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜேர்மனியின் புதிய சேன்சலர்
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான Christian Democratic Union (CDU) கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, ஜேர்மனியின் அடுத்த சேன்சலராக மெர்ஸ் வரவிருக்கிறார்.
ஆனால், வலதுசாரி கட்சி AfD இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதால், புதிய கூட்டணி அமைப்பது சிக்கலாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
யூரோ உயர்வு - டொலர் வீழ்ச்சி
திங்கட்கிழமையன்று யூரோ கடந்த ஒரு மாதமாக காணாத அளவிற்கு உயர்வான $1.0528 டொலரை அடைந்தது.
இதே நேரத்தில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான அச்சம் காரணமாக டொலர் மதிப்பு இரண்டு மாதங்களில் காணாத அளவிற்கு 106.12-ஆக வீழ்ந்தது.
பொருளாதாரப் பரிமாற்றம்
அமெரிக்காவில் வரவிருக்கும் பொருளாதார தரவுகளால், மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், Pound,Yen உள்ளிட்ட நாணயங்கள் உயர்ந்துள்ளன.
இதை தொடர்ந்து, முதலீட்டாளர்கள் ஜேர்மனியின் புதிய அரசாங்கம் விரைவாக உருவாகுமா? பொருளாதார மேம்பாடு எப்போது வரும்? என்பதற்காக கவனித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
USD to Euro, Euro, US Dollar, Germany Election Result