உக்ரைனில் களமிறங்கும் பன்னாட்டுப் படைகள்... தயாரென அறிவித்த ஐரோப்பா
ரஷ்யா - உக்ரைன் இடையிலான சமாதான உடன்படிக்கைக்கான அமெரிக்க முன்மொழிவின் ஒரு பகுதியாக, உக்ரைனில் பன்னாட்டுப் படை ஒன்றை வழிநடத்த ஐரோப்பா தயாராக இருப்பதாக ஐரோப்பியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டுப் படைகளால்
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்க ஆதரவுடன் உக்ரைனின் படைகளை மீண்டும் உருவாக்குவதற்கும், உக்ரைனின் வான்வெளியைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான கடல் பயணங்களுக்கு உதவுவதற்கும் உக்ரைனுக்குள் செயல்படுவதன் ஊடாக தங்களின் பன்னாட்டுப் படைகளால் உதவ முடியும் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதான ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகவே புதிய பாதுகாப்பு உத்தரவாதமும் விவாதிக்கப்படுகிறது. இதனூடாக இரு நாடுகளுக்குமிடையே அமைதி திரும்பும் என்றும் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அமெரிக்கா நம்புகின்றனர்.
ஆனால் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களின் எதிர்கால நிலை குறித்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் 800,000 துருப்புக்களைக் கொண்ட நிலையான இராணுவத்தை பராமரிக்க மேற்கத்திய ஆதரவைப் பெறும், அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் மீறபப்டுகிறதா என்பதை கண்காணிக்கும், அத்துடன் ரஷ்யாவின் எதிர்கால தாக்குதல் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும்.

ஐரோப்பா ஆதரவளிக்கும்
மேலும், எதிர்காலத்தில் ஆயுதமேந்திய தாக்குதல் ஏற்பட்டால் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சட்டப்பூர்வ உறுதிமொழியில் ஐரோப்பிய நாடுகள் தேசிய நடைமுறைகளுக்கு உட்பட்டு கையெழுத்திடும்.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு ஐரோப்பாவும் ஆதரவளிக்கும். புதிய ஒப்பந்தமானது, வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்து நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு நிகரான ஐந்தாவது பிரிவு போன்ற உத்தரவாதங்களை உக்ரைனுக்கு அளிக்கும்.

இந்த நிலையில், பெர்லினில் நடந்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையாளர் பாராட்டியதால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |