ஜெலென்ஸ்கியால் புதிய உத்வேகம் பெறும் ஐரோப்பாவின் கடற்படை பாதுகாப்புத் துறை
ஐரோப்பா முழுவதும் ஜெலென்ஸ்கியின் கூட்டு உற்பத்தி ஒப்பந்தங்கள் கடற்படை பாதுகாப்புத் துறையின் செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டு உற்பத்தி ஒப்பந்தங்கள்
மிக சமீபத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கிரேக்கத்தின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸை ஏதென்ஸில் சந்தித்து, கடல்சார் ட்ரோன் அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கு ஒத்துழைக்கும் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளனர்.

நவம்பர் 17ம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு பறந்த ஜெலென்ஸ்கி, ஜனாதிபதி மேக்ரானுடன் இணைந்து ரஃபேல் மல்டிரோல் விமானங்கள் மற்றும் இன்டர்செப்டர் ட்ரோன்களின் கூட்டு தயாரிப்பை அறிவித்தார்.
அதற்கு அடுத்த நாள், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், துல்லிய வழிகாட்டும் ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பதற்கு அழைப்பு விடுத்தார். இது மட்டுமின்றி, டென்மார்க், ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவுடன் பிற கூட்டு உற்பத்தி ஒப்பந்தங்களும் ஜெலென்ஸ்கியால் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்திருக்கும் சமாதான ஒப்பந்தமானது இது போன்ற ஆயுத உற்பத்தித் திட்டங்களை இன்னும் அவசரமாக்குகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவுகள் எதுவும் இயற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதாலும், பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு சாதகமான அம்சங்கள் உட்படுத்தப்பட்டிருந்தால், அது ரஷ்யாவால் நிராகரிக்கப்படும் என்பதாலும், தற்போது எந்த சமாதான ஒப்பந்தமும் அமுலுக்கு வர ஆய்ப்பில்லை என்றே லண்டனைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முழு நோக்கமும், அடுத்த சுற்று ரஷ்ய தாக்குதல்களுக்கு முன்னதாக உக்ரைனை பாதுகாப்பற்ற நிராயுதபாணியாக மாற்றுவதாகும். இதனாலையே, உக்ரைன் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால ஒப்பந்தங்களை இன்னும் விரைவாகச் சார்ந்துள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் உக்ரைன் தன்னை இணைத்துக் கொள்வதால், தனது போர் அனுபவத்தையும் போர்க்களங்களையும் புதிய அமைப்புகளுக்கான சோதனைக் களங்களாக வழங்கி வருகிறது.

குறிப்பாக ட்ரோன் அமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதற்கு ஈடாக, ரஷ்யாவின் அளவிற்கு இணையாக நீண்டகாலமாக செயலற்ற நிலையில் உள்ள உற்பத்தியை ஐரோப்பாவில் தூண்டிவிட உக்ரைன் முயல்கிறது.
மதிப்புமிக்க பங்காளியாக
ட்ரோன்களால் போர்க்களத்தில் சாதித்துவரும் உக்ரைன், தற்போது அதன் ட்ரோன் அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதை நோக்கி நகர்கிறது.
கடந்த டிசம்பர் 31 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மகுரா ட்ரோன் படகு (USV) ஊடாக சைடுவைண்டர் ஏவுகணைகளை பொருத்தி, தொலைவிலிருந்து இயக்குவதன் மூலம் எதிரி ஹெலிகாப்டர்களை வீழ்த்திய உலகின் முதல் நாடாக உக்ரைன் அறியப்பட்டது.

மே 2 அன்று, மகுரா ட்ரோன் படகிலிருந்து இரண்டு ரஷ்ய சுகோய் போர் விமானங்களை வீழ்த்தி, அது மீண்டும் இராணுவ வரலாற்றை உருவாக்கியது.
கடந்த மாதம், உக்ரைனின் கடலோரப் பாதுகாப்புப் படைகள் மீண்டும் சாதனை ஒன்றைப் பதிவு செய்தது. மகுராவைப் பயன்படுத்தி ரஷ்ய போர்க்கப்பல்களுக்கு சவால் விடுத்தது.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) தெரிவிக்கையில், மகுராவை 1,500 கிமீ தொலைவுக்கு தன்னியக்கமாக பயணிக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும், அதன் சுமையை 2 டன் வெடிபொருளாக இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கண்டுபிடிப்புகள் அந்த நாட்டை ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டமைப்புக்கு ஒரு மதிப்புமிக்க பங்காளியாக மாற்றக்கூடும் என பாதுகாப்பு அமைச்சர் Denys Shmyhal நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |