அணுசக்தி தாக்குதல் உறுதி... ஐரோப்பா நாடுகளில் இருந்து ரஷ்ய மக்களை வெளியேற்றவிருக்கும் புடின்
ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பா மீதான அணு ஆயுத தாக்குதல்
ரஷ்யாவின் Segey Karaganov என்பவர் தெரிவிக்கையில், ஐரோப்பா மீதான அணு ஆயுத தாக்குதல் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், ஆனால் அதற்கு முன்னர் இந்த நாடுகளில் குடியிருக்கும் ரஷ்ய மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Shutterstock
ரஷ்யாவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கை கவுன்சில் தலைவராக செயல்பட்டுவருபவர் இந்த Segey Karaganov. உக்ரைனுக்கு ஆயுத பலத்தை அதிகரிக்க செய்யும் நாடுகள் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த விளாடிமிர் புடின் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இதனால் அவர்கள் கண்டிப்பாக ரஷ்யாவிடம் மண்டியிடுவார்கள் என்றார்.
பிரித்தானியாவும் அமெரிக்காவும் தான் உக்ரைனுக்கு இதுவரை அதிகமான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதனிடையே, இந்த போரில் தம்முடன் இணையும் நாடுகளுக்கு அணு ஆயுதம் அளிக்கப்படும் என ரஷ்யா தற்போது வாக்குறுதி அளித்துள்ளது.
@getty
ரஷ்யாவால் மட்டுமே கொள்கையுடன் செயல்பட முடியும் என குறிப்பிட்டுள்ள Segey Karaganov, ஐரோப்பா மீதான தாக்குதல் கண்டிப்பாக அமெரிக்காவை பதில் தாக்குதலுக்கு தூண்டும் என்றார்.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் கவனம்
இதனிடையே, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டமிட்டுவருவதாக கூறப்படுவதை வரவேற்றுள்ள Segey Karaganov, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
@getty
பெலாரஸ் நாட்டில் ரஷ்யாவின் அணு ஆயுதத்தை நிலை நிறுத்துவதை வரவேற்றுள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி Alexander Lukashenko, ஆனால் தற்காலத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவது தொடர்பில் ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |