ஐரோப்பாவின் பணக்கார நகரம் எது தெரியுமா? லண்டனோ, பாரிஸோ இல்லை
ஐரோப்பாவின் மிகவும் செழித்த நகரம் எந்த நகரம் என்று கேட்டால், லண்டன், பாரிஸ் அல்லது ஜெனிவா என நினைக்கலாம்.
ஆனால் உண்மையில், ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ தான் தற்போது ஐரோப்பாவின் அதி பணக்கார நகரமாக உருவெடுத்துள்ளது.
மாஸ்கோவில் 74 பில்லியனர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 378 பில்லியன்அமெரிக்க டொலர் ஆகும்.
மேலும், மாஸ்கோவில் 35,200 மில்லியனர்கள் உள்ளனர்.
புதிய பில்லியனர்கள் உருவாகும் மாஸ்கோ
கடந்த ஒரு ஆண்டில், மாஸ்கோவில் 12 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.
மாஸ்கோ நகரின் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் வாகிட் அலெக்பெரோவ் (Vagit Alekperov), அவரது சொத்து மதிப்பு 28.6 பில்லியன் டொலர் ஆகும்.
மேலும், மாஸ்கோவின் பணக்காரர்கள் மொத்தமாக கடந்த ஆண்டு 50 பில்லியன் டொலர் வருமானம் சேர்த்துள்ளனர். இதன் மூலம், மாஸ்கோ உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சமீபத்திய வளர்ச்சியின் காரணங்கள்
Forbes தகவலின்படி, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய தடைகளை மீறி மாஸ்கோவின் பணக்காரர்கள் வளர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதும், உள்ளூர் நிறுவனங்கள் வளர்ந்ததும்தான்.
உதாரணமாக, விளாடிமிர் மெல்னிகோவ் என்பவர் நடத்தும் Gloria Jeans எனும் வேக ஆடை (fast fashion) விற்பனை நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு H&M, Zara போன்ற பாரிய நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறியதுதான் முக்கிய காரணம்.
ரஷ்யா முழுவதும் பணக்காரர்கள் அதிகரிப்பு
மாஸ்கோவில் மட்டுமல்லாது, ரஷ்யா முழுவதும் பில்லியனர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 22 பேர் அதிகரித்து, 110-ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த செல்வம் 505 பில்லியன் டொலர் ஆகும், இது கடந்த ஆண்டிலிருந்து 152 பில்லியன் டொலர் அதிகம்.
தொடர்ந்து மேற்கத்திய பொருளாதார தடைகளை எதிர்கொண்டாலும், ரஷ்யாவின் பணக்காரர்கள் புதிய வழிகளில் செல்வத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |