ரஷ்யாவை அடுத்து ஸ்வீடன் இசை நிகழ்ச்சிக்கும் ஐ.எஸ் அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
ஸ்வீடனில் Eurovision பாடல் போட்டிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேலிய மக்களுக்கு எச்சரிக்கை
Eurovision நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று இஸ்ரேலிய மக்களுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த ஆண்டிற்கான போட்டியில் கலந்துகொள்வதால், போராட்டங்களை தூண்டிவிட்டு வன்முறை சம்பவங்களை பயங்கரவாத அமைப்புகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் அதிகாரிகள் தரப்பில் எழுந்துள்ளது.
மே 7ம் திகதி தொடங்கி 11ம் திகதி வரையில் திகைக்கவைக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஸ்வீடன் உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் திட்டங்கள் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது.
மே 9ம் திகதி இரண்டாவது அரையிறுதிக்கு இஸ்ரேல் கலந்துகொள்ளும் நிலையில், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் இறுதிப் போட்டிகள் முன்னெடுக்கப்படும் 11ம் திகதியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இஸ்ரேலில் பாதுகாப்பு சபை தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடன் பயணம் தவிர்க்க வேண்டும் என்றும், பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும்
கடந்த ஓராண்டில் 12 ஐ.எஸ் தாக்குதல்களை ஐரோப்பா முழுவதும் பொலிசார் முறியடித்துள்ள நிலையில், ஐ.எஸ் தரப்பு புதுவகை தாக்குதலை முன்னெடுக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
மிக விசித்திரமாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கையில், தங்களது ராணுவ செயலி ஊடாக அவசர எச்சரிக்கைகளை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், இஸ்ரேல் மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்வீடன் அரசாங்கம் அதிகரித்துள்ளது. 100,000 மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்றே நம்பப்படுகிறது.
மார்ச் 22ம் திகதி மாஸ்கோவில் உள்ள க்ராஸ்னோகோர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள குரோகஸ் சிட்டி ஹால் இசை அரங்கில் ஐ.எஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 137 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |