100 யார்டுக்கு 2000 ரஷ்ய வீரர்கள்…உக்ரைனுக்குள் அனுப்பப்படும் மனித ஜாம்பி அலைகள்!
உக்ரைனில் ஒவ்வொரு 100 யார்டுகளுக்கும் ரஷ்யா 2000 ராணுவ வீரர்களை இழப்பதாக நோட்டோ தெரிவித்துள்ளது.
நோட்டோ தகவல்
உக்ரைனிய படைகள் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு 100 யார்டு பரப்பளவுக்கும் ரஷ்ய படைகள் 2000 வீரர்களின் உயிர்களை இழக்கின்றன என நோட்டோ உளவுத்துறை அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்யா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறது, பெரும்பாலான மக்கள் போதிய பயிற்சி பெறாதவர்களாகவும், வசதியற்றவர்களாகவும் உள்ளனர்.
AFP via Getty Images
இதன் விளைவாகவே ரஷ்யா பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை சந்திப்பதாக நாங்கள் காண்கிறோம் என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் அம்பலப்படுத்தியுள்ளார்.
மறுப்புறம் கடந்த பிப்ரவரி 24ம் திகதி முதல் இதுவரை சுமார் 1,40,000 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜாம்பி அலைகள்
லாயிட் ஆஸ்டின் வழங்கிய கூடுதலான தகவலில், ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தளபதிகள், பயிற்சி இல்லாத போதைப் பொருள் ஊட்டப்பட்ட வீரர்களை உக்ரைனிய போராளிகள் முன்பு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
CNN
அத்துடன் தங்களின் முக்கிய படைகள் செல்வதற்கு முன்பு முடிவில்லாத போதைப் பொருள் ஊட்டப்பட்ட மனித ஜாம்பி அலைகளை முன்னோக்கி அனுப்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவால் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு போதைப் பொருளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.