போருக்கு தயாராகும் ரஷ்ய பள்ளி சிறுவர்கள்: கொடூரனாய் மாறும் ஜனாதிபதி புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் உடனான போரின் முன்வரிசையில் பள்ளி குழந்தைகளை பயன்படுத்த தயார்படுத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மரணத்திற்கு அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் ரஷ்ய துருப்புகள் பெரும் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கட்டாய இராணுவ சேவைக்கு புடின் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் சேர்க்கப்பட்ட வீரர்கள் வெறும் இரண்டு வார கால போர் பயிற்சிக்கு பிறகு, உக்ரைனுடனான போரின் முன்வரிசை தாக்குதலுக்கு அனுப்பப்பட்டனர்.
Shutterstock
வெறும் இரண்டு வார கால போர் பயிற்சி மட்டுமே இருந்தால் இந்த வீரர்கள் பெரும்பாலானோர் உக்ரைனிய படைகளின் தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளுக்கு போர் பரவும் அபாயம்
உக்ரைனுடனான போர் தாக்குதலில் ரஷ்ய படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால் போரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் ஜனாதிபதி புடின் மேற்கொண்டு வருகிறார்.
உக்ரைனுடனான இராணுவ நடவடிக்கையானது ஆண்டு கணக்கில் நீடிக்க கூடும் என்றும், இந்த போர் மேற்கத்திய நாடுகளுக்கும் பரவலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
TASS/Vladimir Smirnov
அதன் முன்னெச்சரிக்கையாக ரஷ்யா அபாய எச்சரிக்கை ஒலிப்பானை சரி பார்ப்பதாகவும், நிலத்தடி ரயில் நிலையங்கள் பதுங்கு குழிகளாக மாறி வருவதாகவும் அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரில் களமிறங்கும் ரஷ்ய பள்ளி சிறுவர்கள்
போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின், தாக்குதலின் முன்வரிசையில் பள்ளி குழந்தைகளை பயன்படுத்த தயார்படுத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதனடிப்படையில் பள்ளி சிறுவர்கள் தங்களின் கடைசி இரண்டு பள்ளி ஆண்டுகளில் இராணுவ பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள், இவர்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்வரிசை தாக்குதலுக்கு அனுப்பப்படுவார்கள் என மிரர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
TASS/Vladimir Smirnov
140 மணிநேரங்களை உள்ளடக்கிய இந்த இராணுவ பயிற்சியில் மாணவர்கள் போர் பயிற்சி மட்டும் இல்லாமல், முதலுதவி சிகிச்சை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும், அத்துடன் இவை போர்க்களத்தில் இளைஞர்கள் உயிர் வாழ உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படங்களில் கையில் துப்பாக்கிகளுடன் பயிற்சி மாணவர்கள் ஈடுபட்டு வருவது தெளிவாகி இருப்பதுடன் பெரும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
TASS/Vladimir Smirnov