பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஊழல் வழக்கில் சிறை: மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோஸி தரப்பில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஊழல் வழக்கில் சிறை
நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து, தனது கட்சியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்த தகவலைப் பெற முயன்றதற்காக நிக்கோலசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
AFP
மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
சிறைத்தண்டனையை எதிர்த்து நிக்கோலஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், பாரீஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டதால், அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், நிக்கோலஸ் சிறை செல்லத் தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக, அவர் காலில் மின்னணுப்பட்டை அணிந்து தன் வீட்டிலேயே தன் தண்டனைக் காலத்தை செலவிடலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
EPA-EFE/YOAN VALAT
தீர்ப்பைத் தொடர்ந்து நிக்கோலஸ் தரப்பினர் பிரான்சின் உயரிய நீதிமன்றமான Court of Cassation என்னும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.