பெருந்தொகை செலவிடப்படட 10 ராஜ குடும்பத்து திருமணங்கள்: யார் திருமணத்திற்கு அதிக செலவு?
உலக அளவில் ராஜ குடும்பத்து திருமணங்களில் அதிக செலவிடப்பட்டது யாருக்கு என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வரிப்பணத்திலேயே திருமணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதியின் திருமணம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. மணமகளுக்கான உடைக்கு மட்டும் சுமார் 390,000 பவுண்டுகள் செலவிடப்பட்ட்து. அந்த திருமணத்திற்கான மொத்த செலவு 32 மில்லியன் பவுண்டுகள் என தெரிய வந்த நிலையில், பெரும்பகுதி தொகை பாதுகாப்புக்கு செலவிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
@PA
இருப்பினும் பிரித்தானிய மக்களின் வரிப்பணத்திலேயே திருமணம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் மிகவும் குறைந்த செலவில் முன்னெடுக்கப்பட்ட திருமணமானது எலிசபெத் ராணியாரின் பேத்தி, இளவரசி யூஜின் திருமணத்திற்கு என்றே கூறுகின்றனர்.
2018 அக்டோபரில் நடந்த இந்த திருமணத்திற்கு 3 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதில் 2 மில்லியன் பவுண்டுகள் பாதுகாப்புக்கு என கூறுகின்றனர் . ஆனால் திருமணத்திற்கான பெரும்பகுதி தொகையை இரு குடும்பத்தினரும் செலவிட்டுள்ளனர்.
@rex
2018 மே மாதத்தில் நடந்த ஹரி - மேகன் திருமணத்திற்கு மொத்தமாக 32 மில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளது. மொத்தம் 600 சிறப்பு விருந்தினர்கள் குறித்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
53 மில்லியன் பவுண்டுகள்
மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட் திருமணத்திற்கு மொத்தம் 53 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண விழாவானது 55 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஆடம்பர திருமணம் என்றே கூறுகின்றனர்.
@sutterstock
2011ல் நடந்த இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியின் திருமணத்திற்கு மொத்தம் 30 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. திருமணத்தன்று கேட் 250,000 பவுண்டுகள் மதிப்பிலான உடை அணிந்திருந்தார். ஸ்பெயின் இளவரசர் Felipe திருமணத்திற்கு 19 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் - மேரி திருமணம் 2004ல் நடந்தது. செலவிடப்பட்ட மொத்த தொகை 20 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறுகின்றனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அபுதாபி இளவரசர் திருமணம் என்றே கூறுகின்றனர்.
@getty
1981ல் நடந்த இந்த திருமணத்திற்கு மொத்தம் 270 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு என மட்டும் 20,000 இருக்கைகள் கொண்ட அரங்கம் ஒன்றும் அமைத்துள்ளனர். ஒருவார காலம் நீண்ட விழாவில் நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் சென்ற ராஜ குடும்பம் அங்குள்ள மக்களுக்கு விருந்தும் அளித்துள்ளனர்.