அமெரிக்காவிற்கு தான் ஆபத்து-வெனிசுவேலாவை போரில் தோற்கடிப்பது எளிதல்ல
அமெரிக்கா வெனிசுவேலாவை படையெடுக்க முயன்றால் அது எளிதான விடயமாக இருக்காது என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை வெனிசுவேலாவின் அரசாங்கத்திற்கும் அதன் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
வெனிசுவேலா ரஷ்யா, சீனா மற்றும் ஈரானின் ஆதரவுடன், உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை கொண்டுள்ளது.
இதில் Su-30MK போர் விமானங்கள், சீனாவின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஈரானின் வேகமான தாக்குதல் படகுகள் அடங்கும். இவை அமெரிக்காவின் கடற்படைக்கு பெரும் ஆபத்தாக இருக்கலாம்.

அமெரிக்கா, வெனிசுவேலாவை கைப்பற்ற 50,000 வீரர்கள் தேவைப்படும் என CSIS நிறுவனம் கணிக்கிறது. அதற்கு பின் நிலைமையை நிலைநிறுத்த 100,000 வீரர்கள் தேவைப்படும்.
வெனிசுவேலாவின் நிலப்பரப்பு ஈராக் போன்று இரட்டிப்பு மடங்காகவும், மக்கள் தொகை 28 மில்லியனாகவும் உள்ளது. நகர்ப்புற போர் மற்றும் காடுகளில் கொரில்லா தாக்குதல்கள் அமெரிக்க படையை சிக்கல்களில் ஆழ்த்தும்.
மேலும், வெனிசுவேலாவின் 150,000 வீரர்கள் மற்றும் 100,000 'colectivos' எனப்படும் அரச ஆதரவு குழுக்கள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
போர் ஏற்பட்டால், கொலம்பியா மற்றும் பிரேசிலில் உள்ள கிளை அமைப்புகள், போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல்படலாம்.
இந்த படையெடுப்பு, அமெரிக்காவின் சர்வதேச நம்பகத்தன்மையை பாதித்து, சீனாவுடன் லத்தீன் அமெரிக்கா இணைவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |