காலாவதியான வதிவிட விசா... ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள சலுகை
ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான வதிவிட விசா வைத்திருப்போருக்கு இரண்டு மாத சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான வதிவிட விசா
காலாவதியான வதிவிட விசா வைத்திருப்போர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அபராதம் ஏதுமின்றி விசாவை புதுப்பித்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.
வியாழக்கிழமை இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிகாரிகள், காலாவதியான வதிவிட விசா வைத்திருப்போருக்கு இரண்டு மாத சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக தங்கள் விசாவினை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் செப்டம்பர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும். இந்த இரண்டு மாத சலுகை காலத்தில் அபராதம் ஏதுமின்றி நாட்டைவிட்டு வெளியேறலாம் அல்லது விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
தற்போது வதிவிட விசா காலாவதியான பின்னர் அபராதம் விதிப்பதற்கு முன் ஒரு மாத காலம் மட்டுமே சலுகையாக ஐக்கிய அமீரகம் அளித்து வருகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளுக்கும் 50 திர்ஹாம் அபராதமாக விதிக்கின்றனர்.
சிறப்பு சலுகை காலம்
பொதுவாக வதிவிட விசாவின் காலாவதி என்பது 1 முதல் 3 ஆண்டுகள். இதில் சிறப்பு வதிவிட விசா என்றால் 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலாவதியான பின்னர் நாட்டைவிட்டு வெளியேறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 2023 முதல் அபராத கட்டணமானது நாள் ஒன்றிற்கு 50 திர்ஹாம் என முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குடியிருப்பாளர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் visit visa வைத்திருப்போர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டில் வசிக்கும் ஐக்கிய அமீரக மக்களுக்கு சலுகை காலமாக 6 மாதங்கள் வரையில் அளிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |