யெரெவன் வணிக வளாத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து: பரபரப்பு காட்சிகள்
- யெரெவனில் உள்ள சுர்மாலு வணிக வளாகத்தில் பயங்கர வெடி விபத்து.
- குறைந்தது ஒருவர் உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஆர்மீனியா தலைநகர் யெரெவனில் உள்ள சுர்மாலு வணிக வளாக மையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அவசரகால அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
யெரெவனில் உள்ள சுர்மாலு வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
An #explosion occurred in the "#Surmalu" shopping center in #Yerevan, the Armenian Ministry of #Emergency Situations reports.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) August 14, 2022
Many people were transferred to different hospitals. The number of victims may increase. #Armenia pic.twitter.com/BmpHkwcOQ9
இந்த வெடி விபத்தினால் வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.
வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர வெடி விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஆர்மீனியா நாட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
New images from the explosion in Yerevan, the capital of Armenia
— TPYXA ⚡ Middle East 🇸🇩 🇮🇷 (@MEPaper1090) August 14, 2022
#Armenia #Yerevan #Երևան pic.twitter.com/LNFK7AAmmT
கூடுதல் செய்திகளுக்கு; விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: ஆவுஸ்திரேலிய தலைநகரில் பரபரப்பு
மேலும் இந்த வெடி விபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் 20 மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.