தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு புகார்.., நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் மீது புகார்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கினை ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் தொடர்ந்ததன் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் கொடுத்த புகாரில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்துள்ளார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, கடந்த 2018 -ம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் மூலம் நன்கொடை பெறுவதற்காக தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த திட்டமானது கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |