தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட கடும் வெப்பநிலை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விடுக்கப்பட்ட வெப்பநிலை எச்சரிக்கை
17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
மீனவர்கள் குறித்து எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |