கடுமையான காலநிலைக்கு இதுவரை பலியான மக்களின் எண்ணிக்கை: வெளியான பகீர் தகவல்
தீவிர வானிலை, காலநிலை மற்றும் பெருவெள்ளம் தொடர்பான நிகழ்வுகள் கடந்த அரை நூற்றாண்டில் 11,778 பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
90 சதவீதமும் வளரும் நாடுகளில்
குறித்த சம்பவங்களால் டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. பதிவான 2 மில்லியன் இறப்புகளில் 90 சதவீதமும் வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது.
@EPA
1970க்கு பின்னர் வெள்ளம், புயல் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார சேதம் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது எனவும், தோராயமாக 4.3 டிரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பும் இதனால் ஏற்பட்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் பல்வேறு கட்ட துரித நடவடிக்கைகளால் தற்போது இறப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்றே கூறுகின்றனர். தீவிர இயற்கை பேரிடர்களால் அமெரிக்கா மட்டும் 1.7 டிரில்லியன் டொலர் இழப்பினை இதுவரை எதிர்கொண்டுள்ளது.
இருப்பினும் வளரும் நாடுகள் மற்றும் தீவு நாடுகள் பல தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படையில் இயற்கை பேரிடர்களால் பெரும் இழப்பை பதிவு செய்துள்ளன. மிக சமீபத்திய இரண்டு ஆண்டுகளில் மட்டும் உலகமெங்கும் இயற்கை பேரிடர்களால் 22,608 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
@AFP
ஆசிய நாடுகளில் 1 மில்லியன் இறப்புகள்
அதேசமயம் பொருளாதார இழப்புகளும் மேலும் அதிகரித்தன, பெரும்பான்மையானவை புயல்களால் ஏற்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் தான் இயற்கை பேரிடர்களால் சுமார் 1 மில்லியன் இறப்புகள் 1970க்கு பின்னர் பதிவாகியுள்ளது.
மேலும், பங்களாதேஷ் நாட்டில் இதுவரை 281 பேரழிவுகள் ஏற்பட்டு 520,758 பேர்கள் இறந்துள்ளதாகவும் ஆசியாவிலேயே அதிக இறப்பு எண்ணிக்கை பதிவானது இங்கு மட்டுமே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
@reuters
ஆனால் ஐரோப்பாவில் 1,784 பேரழிவுகள் இதுவரை பதிவானதில் 166,492 பேர்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக வெப்பநிலையே இறப்புகளுக்கு முக்கிய காரணமாகவும், பெருவெள்ளம் காரணமாக பொருளாதார இழப்புகள் அதிகரித்துள்ளதாவும் தெரியவந்துள்ளது.