அந்தரத்தில் சுழன்ற விமானம்... பிரேசில் விமான விபத்தை நேரில் பார்த்தவர்களின் பகீர் தகவல்
பிரேசிலில் 57 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேரில் பார்த்தவர்கள் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தரத்தில் சுழன்று
பிரேசிலின் Sao Paulo பகுதியில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஒன்று அந்தரத்தில் சுழன்று, நெருப்பு கோளமாக மாறியது என நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், அந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவது பதிவாகியிருந்தது. ஆனால் விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Sao Paulo நகரை நெருங்கும் நிலையில், அந்த விமானமானது 4,100 அடி உயரத்தில் பறந்துள்ளது என்றே கூறுகின்றனர். நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், நடந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்றே கூறுகின்றனர்.
61 பேர்கள் மரணம்
சட்டென்று வானத்தில் இருந்து கீழே விழுந்த விமானமானது அந்தரத்தில் சுழன்றதாகவும் தெரிவித்துள்ளனர். 49 வயதான லொறி சாரதி ஒருவர் தெரிவிக்கையில், தமது குடியிருப்பில் இருந்து வெறும் 150 மீற்றர்கள் தொலைவில் தான் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
விமானம் வீட்டின் மீதே விழுந்து விடுமோ என ஒரு கணம் அஞ்சியதாகவும் அந்த சாரதி தெரிவித்துள்ளார். இன்னொருவர் தெரிவிக்கையில், சாப்பிட்டுகொண்டிருந்தேன், பலத்த சத்தம் கேட்டது, மொட்டைமாடிக்கு சென்று பார்த்தால் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது வீட்டுக்கு மிக அருகாமையில் என்பதால், பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த விமான விபத்தில் 57 பயணிகளுடன் 4 ஊழியர்களும் சேர்த்து 61 பேர்கள் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |