ஆயிரம் நாட்களின் பின்னர் முக கவசம் அணியும் சட்டத்தில் தளர்வு
ஹொங்கொங்கில் சுமார் ஆயிரம் நாட்கள் ஆக முக கவசம் அணிவது கட்டாயமாக பட்டிருந்த நிலையில் இந்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஹொங்கொங்கில் முதல் தடவையாக முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டிருந்தது.
கோவிட் 19 பெருந்தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் உலகின் அநேக நாடுகளில் முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டிருந்தது. அந்த வகையில் ஹொங்கொங்கிலும் முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டிருந்தது. மிக நீண்ட நாட்கள் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாகப்பட்டிருந்ததுடன் இந்த விதியை மீறுவோருக்கு ஆயிரம் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அரசாங்கம் அமுல்படுத்தி வந்தது.
நாளை முதல் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என ஹோங்கொங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் லீ, முகக் கவசம் அணிவது குறித்த சட்ட தளர்வு குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“ நாம் இப்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளோம் என அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். அண்மைய மாதங்களாக ஹொங்கொங்கில் கோவிட் கட்டுப்பாட்டு சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கு அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் விதி தளர்த்தப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த முக கவச அணியும் கட்டாய சட்டமானது தளர்த்தப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் சுமார் 959 நாட்கள் தொடர்ச்சியாக முகக் கவசம் அணியும் சட்டம் நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.