இந்தியர்கள் இருவரைக் கொன்று கம்பத்தில் தொங்கவிட்ட ஆதிவாசிகள்: ஆதிவாசிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ள பேஸ்புக் குழு...
ஆதிவாசிகள் வாழும் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றிற்கு அருகில் சட்டவிரோதமாக நண்டு பிடிக்கப் புறப்பட்டார்கள் இந்திய மீனவர்கள் இருவர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அந்த ஆதிவாசிகளிடம் சிக்கிக்கொள்ள, அவர்களைக் கொன்று, மூங்கில் கம்பத்தில் குத்தித் தொங்கவிட்டுவிட்டார்கள் அந்த ஆதிவாசிகள்.
தாய்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது வட செண்டினல் தீவு. அங்கு ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
ஆனால், 2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். ஆனால், படகு மெல்ல நகர்ந்து செண்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.
மறுநாள் காலை, அவர்களுடைய சக மீனவர்கள் கண்விழித்துப் பார்க்கும்போது, சுந்தர் ராஜ் மற்றும் பண்டித் திவாரியின் படகு செண்டினல் தீவுக்கு அருகே இருப்பதைக் கண்டு சத்தமிட்டு அவர்களை எழுப்ப முயன்றிருக்கிறார்கள்.
Image: Alamy Stock Photo
ஆனால், அவர்களை எழுப்பமுடியவில்லை. அந்த ஆதிவாசிகள் அவர்களைப் பிடித்துக் கொன்று மூங்கில் கம்பங்களில் குத்தித் தொங்கவிட்டுவிட்டார்கள்.
யாரும் இங்கே வராதீர்கள் என அவர்கள் கொடுத்த எச்சரிக்கை அது.
அதற்குப் பின், 2018ஆம் ஆண்டு, கிறிஸ்தவ மிஷனெரியான John Allen Chau என்பவர் அந்தத் தீவினரை சந்திக்க முயன்றிருக்கிறார், அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.
இப்படி அந்த தீவுக்கு செல்ல முயல்பவர்களை எல்லாம் அந்தத் தீவினர் கொல்லவும் தாக்கவும் முயல்வதைக் கண்ட பேஸ்புக் குழு ஒன்று, அந்தத் தீவிலுள்ள ஆதிவாசிகளை அழிப்பது என முடிவு செய்துள்ளது.
அதற்காக பணம் சேகரிப்பது முதலான நடடிக்கைகள் குறித்து அந்தக் குழுவினர் பேஸ்புக்கில் விவாதிக்க, அதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.
விமர்சனத்தைக் கண்டதும் பின்வாங்கிய அந்தக் குழுவினர், ’செண்டினல் தீவை நேசிப்போம்’என தங்கள் குழுவின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளதுடன், தாங்கள் அந்த ஆதிவாசிகளை அழிப்பதாகக் கூறியது சும்மா வேடிக்கைக்காகத்தான் என கூறி பின்வாங்கிவிட்டனர்!