காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி: 9 -ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு
தமிழக மாவட்டம், திருப்பூரைச் சேர்ந்த 9 -ம் வகுப்பு மாணவர் ஒருவர் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வில் தோல்வி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சபரிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார் மற்றும் கமலம். இதில், முத்துக்குமார் டிரைவர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதில், மூத்த மகன் கவியரசு தனியார் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு நடைபெற்று, கடந்த 3 -ம் திகதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
அப்போது, காலாண்டு தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில், அனைத்து பாடங்களிலும் கவியரசு தோல்வி அடைந்துள்ளார்.
மாணவர் உயிரிழப்பு
இதனால், விரக்தியடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்பு, பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கவியரசுவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலிருந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவரின் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |