விண்வெளியில் ஆக்சிஜன் வாங்க பணம் வேண்டும் - மூதாட்டியிடம் ரூ.6 லட்சம் ஏமாற்றிய காதலன்
சமூகஊடகங்களில் காதலிப்பது போல் பழகி, பணம் பறித்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் நாளுக்கு அதிகரித்து வருகிறது.
ஆக்சிஜன் வாங்க பணம் தேவை
இதே போல், ஜப்பானை சேர்ந்த 80 வயதான மூதாட்டி ஒருவரை இளைஞர் ஏமாற்றி ரூ.6 லட்சம் பண மோசடி செய்துள்ளார்.
ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் 80 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், சமூகவலைத்தளம் மூலமாக மூதாட்டியை தொடர்பு கொண்ட மர்ம நபர், காதலிப்பதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனையடுத்து, தான் விண்வெளியில் ஒரு விண்கலத்தில் சிக்கி இருப்பதாகவும், தனக்கு ஆக்சிஜன் வாங்க உடனடியாக பணம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
ரூ.5.95 லட்சம் மோசடி
அதனை நம்பிய மூதாட்டி, தன்னிடம் இருந்த ஒரு மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.5.95 லட்சம்) பணத்தை அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி இது குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
இது போன்று தனிமையில் உள்ள வயதான நபர்களை குறித்து காதலிப்பது போல் பழகி பண மோசடி செய்வது அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |