கணவரின் தகாத பழக்கம்! ஒருநொடியில் பிள்ளைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் கணவரின் தகாத பழக்கத்தால், குடும்பமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32), இவரது மனைவி பெயர் மரகதம் (வயது 30).
இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர், வீட்டுக்கு அருகிலேயே சொந்தமாக பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் பிரபாகரன்.
இந்நிலையில் தனது உறவினரின் அலுவலகத்துக்கு பிரபாகரன் அடிக்கடி சென்று வந்துள்ளார், அங்கு வேலை பார்த்த பெண் ஒருவருக்கும், பிரபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
போனில் அடிக்கடி பேசி வந்த இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர், தனியாக வீடு எடுத்து வசிக்கவும் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி உறவினருக்கு தெரியவர, பிரபாகரின் மனைவிக்கு தெரிவித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் பிரபாகரனிடம் சண்டையிட்டுள்ளார்.
எனினும் தொடர்ந்து இரவு நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரபாகரன்.
இந்த விவாகரம் பெரிதாக மரகதம் கோபித்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தும் பிரபாகரன் தன்னுடைய பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம், தன்னுடைய குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.
தனக்கு நீச்சல் தெரியும் என்பதால், தான் பிழைத்த விடக் கூடாது என்பதற்காக, தன்னை இறுக்கமாக கயிற்றினைக் கொண்டு கட்டியுள்ளார்.
பின்னர், கயிற்றின் மறுமுனையை கல் ஒன்றில் கட்டி வைத்து விட்டு, கிணற்றில் குதித்துள்ளார் மரகதம். இதில், நீரில் மூழ்கிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மறுநாள் காலை, பிரபாகரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகளை அங்கு காணவில்லை.
தொடர்ந்து, அப்பகுதியில் தேடி பார்த்த போது, அங்குள்ள கிணற்றில், மனைவி மற்றும் குழந்தைகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கே உடைந்து அழுத பிரபாகரன், பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, மரகதம் மற்றும் ஒரு குழந்தைகளின் உடலை மீட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசாரும் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.