ஆம்புலன்ஸ் வரவில்லை., பிணத்தை பைக்கில் கொண்டு சென்ற அவலம்.. மனதை கலங்கடிக்கும் வீடியோ
மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஏதும் கிடைக்காததால் இளைஞரின் சடலம் பைக்கில் வைத்து கொண்டுசெல்லப்பட்டது.
மனதை கலங்கடிக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டம், சயானி தப்லா கிராமத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், 26 வயது இளைஞரின் உடலை பைக்கில் ஏற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வைரலான வீடியோவில், பைக்கை ஓட்டிச் சென்ற ஒருவரும், பின்னால் மற்றொருவர் அமர்ந்தும் உடலை மடியில் வைத்தபடி இருந்தனர்.
அந்த இளைஞர் தனது நண்பருடன் பார்வதி ஆற்றில் குளிக்கச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போது ஹசிம்கான் என்ற இளைஞர் ஆற்றின் ஆழத்திற்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை தேடி எடுத்தனர். அவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் உணவினர்கள் மற்றும் நண்பர்கள் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சுக்காக அலைந்தனர்.
#MadhyaPradesh: Kin forced to carry a youth's body on a bike after they failed to get an #Ambulance in Chayani village of #Sehore district. pic.twitter.com/5qfImtwJes
— Free Press Journal (@fpjindia) September 3, 2022
பலமுறை முயற்சி செய்தும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்து சென்றனர்.