இறந்த உறவினரின் இறுதிச்சடங்குக்காக கூடிய குடும்பம்: திடீரென நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வு
பெல்ஜியம் நாட்டவர் ஒருவருடைய இறுதிச்சடங்குக்காக அவரது நண்பர்களும் உறவினர்களும் கூடியிருந்தார்கள். அப்போது, எதிர்பாராத ஒரு விடயம் நிகழ்ந்தது.
டிக்டாக் பிரபலம்
பெல்ஜியம் நாட்டவரான டேவிட் (David Baerten, 45) ஒரு டிக்டாக் பிரபலம். அவரை, 162,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் டேவிடுடைய மகள் சமூக ஊடகம் ஒன்றில் தன் தந்தையின் இறப்புச் செய்தியை வெளியிட்டிருந்ததுடன், தனது துக்கத்தையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.
Credit: TikTok/@el.tiktokeur2
அவருடைய இறுதிச்சடங்குக்கான திகதியும் வெளியிடப்பட்டது.
இறுதிச்சடங்கில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்
குறித்த நாளில் டேவிடுடைய உறவினர்களும் நண்பர்களும் அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காக காத்திருக்க, கருப்பு நிறக் கார் ஒன்றில் அவரது உடல் வருவதற்கு பதிலாக, ஹெலிகொப்டர் ஒன்று வந்து இறங்கியுள்ளது.
எல்லோரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்க, ஹெலிகொப்டரிலிருந்து இறங்கியுள்ளார் டேவிட். பின்னர்தான் தெரிந்தது, அது அவரும், அவரது மனைவி பிள்ளைகளும் திட்டமிட்டு செய்த ப்ராங்க் என்பது.
Credit: TikTok/@el.tiktokeur2
அவரை பின் தொடர்வோரில் பலர், இது கொடுமையான ப்ராங்க் என விமர்சிக்க, அவரோ, என் உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் என்னை மறந்துவிட்டார்கள். இறுதிச்சடங்கு என்றதும் எல்லாரும் வந்துவிட்டார்கள்.
ஆகவே, நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வந்து பார்க்கலாமே, ஏன் இறுதிச்சடங்கு வரை காத்திருக்கவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்படிச் செய்தேன் என்கிறார் டேவிட்!
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |