நள்ளிரவில் நடுங்கவைத்த சம்பவம்... இரட்டை சகோதரர்கள் உட்பட மூவருக்கு நேர்ந்த துயரம்: வெளியான புகைப்படம்
சிகிச்சை பலனின்றி மூவரும் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
துரிதமாக செயல்பட்ட பொலிசார், 20 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
டப்ளின் நகரில் இளம்பெண் மற்றும் அவரது இரட்டை சகோதரர்கள் என மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், முதன்முறையாக அவர்களது புகைப்படம் வெளியாகியுள்ளது.
டப்ளின் நகரில் Tallaght பகுதியில் நள்ளிரவு சுமார் 12.30 மணி கடந்த நிலையில், நடுங்க வைத்த இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 8 வயதேயான இரட்டையர்கள் Chelsea மற்றும் Christy Cawley, இவர்களது மூத்த சகோதரி 18 வயது Lisa Cash ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக துரிதமாக செயல்பட்ட பொலிசார், 20 வயது கடந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வன்முறை சம்பவம் தொடர்பில் Rossfield குடியிருப்பு பகுதிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், குற்றுயிராக மீட்கப்பட்ட இரட்டையர்கள் மற்றும் இளம்பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
@Damien Eagers
ஆனால் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி மூவரும் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மட்டுமின்றி, இவர்களின் 14 வயது சகோதரரும் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. பிள்ளைகள் நால்வரின் தாயார் சம்பவப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு, முதலுதவிக்கு பின்னர் குடியிருப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்றே தெரியவந்துள்ளது.
@reuters
தாக்குதலுக்கு இலக்கான குடும்பத்திற்கும் தாக்குதல்தாரிக்கும் அறிமுகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பல கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@reuters