இன்னும் சில மணி நேரத்தில் மீட்கப்படவுள்ள தொழிலாளர்கள்: இனிப்பு, மாலைகளுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்
உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்க குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.
மீட்பு பணி
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் சிலக்யாராவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். கிட்டதட்ட 17 நாட்களாக நீடித்து வரும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இன்னும் சில மணி நேரத்தில் சுரங்கப்பாதையின் உள்ளே இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க சுரங்கத்தின் உட்பகுதியிலேயே தற்காலிக மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மருத்துவ குழுவினரும், தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

காத்திருக்கும் குடும்பத்தினர்
தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களுடன் உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மேலும், தொழிலாளர்களை வரவேற்க மாலைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது. இனிப்புகளுடன் குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.
#WATCH | Garlands brought to Silkyara tunnel rescue site in anticipation of early rescue of 41 trapped workers#Uttarakhand pic.twitter.com/71opSj1sKt
— ANI (@ANI) November 28, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |