மூன்றாம் உலகப்போர் குறித்த பிரபல ஜோதிடரின் கணிப்பு.., தொடர்ந்து பொய்யாவதால் எழும் விமர்சனம்
மூன்றாம் உலகப்போர் குறித்த பிரபல ஜோதிடரின் கணிப்பு மீண்டும் பொய்த்து போனதால் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மூன்றாம் உலகப்போருக்கான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பல தசாப்தங்களாக யூகிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.
முதல் இரண்டு உலகப் போர்களின் தாக்கமே இன்னும் மக்கள் மனதில் அழியாமல் இருக்கும் நிலையில், மற்றொரு போர் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ரஷ்யா - நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை ஆகியவை மூன்றாம் உலகப் போரை தூண்டும் வகையில் உள்ளன.
மூன்றாம் உலகப் போர்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால், அதற்கு சாத்தியம் குறைவானதாகவே இருந்தாலும் இதுபோன்ற கணிப்புகள் அடிக்கடி வந்துகொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில், இந்திய ஜோதிடர் குஷால் குமார் மூன்றாம் உலகப்போர் குறித்த கணிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்திய ஜோதிடர்
இந்திய மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால் குமார். இவர் இந்தியாவின் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் குறித்து கணித்தவை உண்மையானது. அந்தவகையில், மூன்றாம் உலகப்போர் குறித்து தொடர்ந்து பல கணிப்புகளை முன்வைத்து வருகிறார்.
இவர் கடந்த ஜூன் 18 -ம் திகதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று கணித்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து, ஜூலை 26 அல்லது 28 -ம் திகதிகளில் தொடங்கும் என்று கூறினார். ஆனால், அதுவும் பொய்த்து போனது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 அல்லது 5 -ம் திகதிகளில் உலகபோர் தொடங்கும் என்று கணித்திருந்தார். இதனால், உலக நாடுகளும் மக்களுக்கு அச்சத்துடன் இருந்தனர்.
ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவரது கணிப்புகள் மீண்டும் பொய்த்து போயுள்ளது. இதனால், இவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |