சிறுமிகள், பெண்களை ஏமாற்றி ஆபாச பட தயாரிப்பு.. அமெரிக்காவில் தப்பிச் சென்ற ஆயுள் தண்டனைக் குற்றவாளி ஸ்பெயினில் கைது
நியூசிலாந்தைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் அமெரிக்காவில் இருந்து தப்பிச்ச சென்ற நிலையில், ஸ்பெயின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பியோடிய ஆயுள் தண்டனை குற்றவாளி
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர் நியூசிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஜேம்ஸ் பிராட்.
இந்த குற்றச் செயலுக்காக மைக்கேல் பிராட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை ஏமாற்றி வேலைக்கு அமர்த்தும் GirlsDoPorn மற்றும் GirlsDoToys எனும் ஆபாச தயாரிப்பு நிறுவனம் மற்றும் இணையதளங்களை பிராட் வைத்திருந்தார்.
அவற்றின் மூலம் பிராட் 14 மில்லியன் பவுண்டுகளை குற்றச் செயல்கள் மூலம் சம்பாதித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடினார். இதனால் FBI பொலிஸின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் பிராட் சேர்க்கப்பட்டார்.
ஹொட்டலில் கைது செய்த ஸ்பெயின்
பொலிஸார் இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில், தவறான அடையாளத்தின் கீழ் மைக்கேல் பிராட் தங்கியிருந்ததாக அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
@Reuters
FBI-யின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள 57 பேர் மட்டுமே அமெரிக்காவிற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், FBI தேடும் குற்றவாளி ஒருவர் ஸ்பெயினில் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
@FBI