FIFA உலகக் கோப்பையில் தோல்வியடைந்ததைக் கொண்டாடிய ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொலை
உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததைக் கொண்டாடியதற்காக ஈரானிய வீரரின் நண்பர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபடப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானியர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை
கத்தாரில் நடந்துவரும் FIFA உலகக் கோப்பையில் இருந்து தனது நாட்டின் தேசிய அணியை அமெரிக்கா வெளியேற்றியதைக் கொண்டாடிய ஈரானியர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் தெரிவித்தன.
தலைநகர் தெஹ்ரானின் வடமேற்கே காஸ்பியன் கடல் கடற்கரையில் உள்ள Bandar Anzali என்ற நகரத்தில் தனது காரின் ஹார்னை அடித்ததால், 27 வயதான மெஹ்ரான் சமக் (Mehran Samak) சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Getty images
சமக் "அமெரிக்காவிற்கு எதிரான தேசிய அணி தோல்வியைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நேரடியாக குறிவைக்கப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று ஒஸ்லோவை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் (IHR) தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஈரானில் உள்ள மனித உரிமைகளுக்கான மையமும் (CHRI) மெஹ்ரான் சமக் கொண்டாடும் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
இந்த சம்பவம் குறித்து ஈரான் அதிகாரிகளிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நண்பனை இழந்த சோகத்தை வெளிப்படுத்திய ஈரானிய வீரர்
இந்த சம்பவத்தில் ஒரு திருப்பமாக, உலகக்கோப்பையில் விளையாடிய ஈரானிய கால்பந்தாட்ட வீரர் சயீத் எசடோலாஹி (Saeede Zatolahi), Bandar Anzali-யைச் சேர்ந்த அவர், உயிரிழந்த சமக்கை தனக்கு தெரியும் என்பதை வெளிப்படுத்தி, ஒரு இளைஞர் கால்பந்து அணியில் அவர்கள் ஒன்றாக இருக்கும் படத்தை பகிந்துகொண்டார்.
அந்த பதிவில், "நேற்று இரவு கசப்பான தோல்விக்கு பிறகு, உன் மரண செய்தி என் இதயத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறினார்.
Getty Images
அவர் தனது நண்பரின் மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் "ஒரு நாள் முகமூடிகள் விழும், உண்மை அப்பட்டமாக வெளிப்படும்" என்று கூறினார்.
FIFA உலகக் கோப்பையில் எதிரணியான அமெரிக்காவின் வெற்றியை ஈரானிய மக்களே கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஈரானின் Sanandaj நகரத்தில் அமெரிக்கா அடித்த ஒற்றை கோலை ஆரவாரத்துடன் ஆடிப்பாடி கொண்டாடியதாக இணையத்தில் சில ஆதாரங்கள் காட்டுகின்றன.
Iran is a country where people are very passionate about football. Now they are out in the streets in the city of Sanandaj & celebrate the loss of their football team against US.
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) November 29, 2022
They don’t want the government use sport to normalize its murderous regime.pic.twitter.com/EMh8mREsQn pic.twitter.com/MqpxQZqT20