கத்தார் உலக கோப்பையில் வரலாற்று சாதனை: பிரான்ஸ், பிரேசிலை பின்னுக்கு தள்ளி குவிக்கப்பட்ட கோல்கள்
இதுவரை நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் கத்தார் 2022 கால்பந்து உலக கோப்பை போட்டியிலேயே அதிகமான கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் உலக கோப்பையில் அதிக கோல்கள்
கிழக்கு ஆசிய நாடான கத்தாரில் 2022ம் ஆண்டுக்கான ஃபிஃபா கால்பந்து போட்டி சிறப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதுவரை நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் 1998ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும், 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் மட்டுமே 171 கோல்கள் அடிக்கப்பட்டு இருந்தது, இதுவே உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடர்களாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கத்தாரில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடரில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது கால்பந்து உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக கத்தார் உலக கோப்பை மாறியுள்ளது.
Best World Cup EVER! Kudos Qatar. ?? pic.twitter.com/tqk1EFEmGz
— Usher Komugisha (@UsherKomugisha) December 18, 2022
கத்தார் உலக கோப்பையில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதன் மூலம் போட்டி ஒன்றுக்கு சராசரியாக 2.68 கோல்கள் அடிக்கப்பட்டது.
அதிக கோல்கள் அடித்த அணி
சுவாரஸ்யமாக, இங்கிலாந்து (13 கோல்கள்) மற்றும் போர்ச்சுகல் (12 கோல்கள்) ஆகிய அணிகளும் FIFA உலகக் கோப்பை 2022 இல் அரையிறுதிக்கு முன் அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியலில் முன்னிலை வகித்தன, ஆனால் போட்டியிலிருந்து வெளியேறின.
இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி (16 கோல்களும்) சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணி (15 கோல்களும்) இந்த தொடரில் அடித்துள்ளனர்.
அதிக கோல் அடித்த வீரர்களில் பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை தட்டிச் சென்றுள்ளார்.