உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவரத்தை தடுக்க பிரான்ஸில் குவிக்கப்படும் காவல் அதிகாரிகள்

Lionel Messi Football France Argentina FIFA World Cup Qatar 2022
By Thiru Dec 16, 2022 01:04 PM GMT
Report

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சுமார் 14,000 காவலர் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

வெடித்த போராட்டம்

கத்தார் உலக கோப்பை போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி மொராக்கோ அணியுடன் மோதியது.

இதில் மொராக்கோ அணியை தோற்கடித்து பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவரத்தை தடுக்க பிரான்ஸில் குவிக்கப்படும் காவல் அதிகாரிகள் | Fifa World Cup France Argentina 14000 Cops France

இந்த போட்டியை காண பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் மாண்ட்பெல்லியர் பகுதிகளில் திரண்ட இரு அணிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவாக முழக்கமிட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரான்சில் மொராக்கோ மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் வெடித்ததாக தகவல் வெளியானது.

இதில் கலவரக்காரர்கள் அங்காடிகளை சேதப்படுத்தியதாகவும், வாகனங்களுக்கு நெருப்பு வைத்தாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவரத்தை தடுக்க பிரான்ஸில் குவிக்கப்படும் காவல் அதிகாரிகள் | Fifa World Cup France Argentina 14000 Cops FranceAFP

குவிக்கப்பட்ட 14,000 காவலர்

அரையிறுதிப் போட்டியின் போது கலவரம் வெடித்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி விளையாட உள்ளது.

இந்த போட்டியின் வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு பணிகளில் பிரான்ஸ் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுமார் 14,000 வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: கலவரத்தை தடுக்க பிரான்ஸில் குவிக்கப்படும் காவல் அதிகாரிகள் | Fifa World Cup France Argentina 14000 Cops FranceReuters 

பிரான்ஸின் கடந்த காலங்களில் 1998 மற்றும் 2018ம் ஆண்டு உலக கோப்பை வெற்றியின் போது சாம்ப்ஸ்-எலிசீஸ் அவென்யூ பகுதியில் பெருவாரியான ரசிகர்கள் குவிந்தனர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு(அதாவது 2018 ல்) சுமார் 600,000 ரசிகர்கள் இந்த பகுதியில் குவிந்து ஆரவாரம் செய்தும், நடனமாடியும் கொண்டாடினர்.

ஞாயிற்றுக்கிழமை இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் 2,750 அதிகாரிகள் அருகில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US