சீனாவில் வீடுகளின் மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்; ஒருவர் மரணம்.., வைரலாகும் பரபரப்பு காட்சி
மத்திய சீனாவில் இன்று போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன விமானப்படையின் J-7 ரக போர் விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகி விமான நிலையத்திற்கு அருகில் வீடுகலின் மீது விழுந்து நிருங்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலிருந்த விமானி பாராசூட் மூலம் உயிர்தப்பியதை தொடர்ந்து, காயமடைந்த மற்றவர்களுடன் மருத்துவமனைக்கு க்போண்டு செல்லப்பட்டதாக மாற்றப்பட்டதாக சீனாவின் CCTV தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!
Hubei மாகாணத்தில் உள்ள Xiangyang என்ற நகரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பல கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போர் விமானம் வீட்டின் மீது விழுந்து எரிந்துகொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் உக்ரேனியக் கொடியை ஏற்றிய ரஷ்ய பெண்மணி!
HUBEI PROVINCE
— PSF Intel Consortium (@INTELPSF) June 9, 2022
CHINA
A J-7 fighter jet of the PLA Air Force has crashed during a routine training, leading to damage to residential buildings. Two civilians on ground injured, one dead, pilot ejected safely. pic.twitter.com/NYX0QoA2f1
சீனாவில் கடந்த மார்ச் மாதம், Guangxi மாகாணத்தின் தெற்கு பகுதியில் பயணிகள் விமானம் 29,000 அடி உயரத்திலிருந்து மலை அடிவாரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 132 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்., பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்