உங்க முடி கிடுகிடுன்னு அடர்த்தியா வளரனுமா? இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறார்கள்.
முடி உதிர்வை தவிர்தது இயற்கை முறையில் கூட முடியை அடர்த்தியாக வளர செய்யலாம். அதற்கு வெந்தயம் உதவுகின்றது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
எவ்வாறு உதவுகின்றது?
வெந்தயம் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதத்தை முடிக்கு வழங்குகிறது. இது வேர்களை மீண்டும் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இது உங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால், நீளமான அடர்த்தியான மென்மையான முடியை நீங்கள் பெறலாம்.
வெந்தயத்தில் உள்ள லெசித்தின் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கையான டானிக் முடியை ஈரப்பதமாக்குகிறது. மேலும் பளபளப்பு மற்றும் மென்மை ஆகியவற்றை மீண்டும் கொண்டு வருகிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
- வெந்தய விதைகளை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும். எண்ணெயை உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும்.
- விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, கெட்டியான தயிருடன் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் நன்றாக முடியை அலச வேண்டும். இது பொடுகு மற்றும் பிற உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கிறது. வெந்தய விதைகள் அல்லது இலைகளை ஷூ ப்ளவருடன் கலந்து குளிப்பது முடி மற்றும் உச்சந்தலையை குளிர்ச்சியாக்கும்.
வெந்தயம் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
வெந்தயமானது முடி உதிர்தலில் குறிப்பிடத்தக்க குறைப்பை வெளிப்படுத்துகிறது. வெந்தயத்தை நேரடியாக நீங்கள் தலையிலும் பயன்படுத்தலாம்.
வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் அதை ஆறு மாதங்களுக்கு 300 mg/day வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் .