தமிழகத்தை அதிரவைத்த நிதி நிறுவன மோசடி.., சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை: யார் இவர்?
விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனம் மீது புகார்
தமிழக மாவட்டம், சென்னை அடையாறில் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி பலரும் ஏமாந்து முதலீடு செய்தனர்.
பின்னர், இந்த நிதி நிறுவனம் மோசடி செய்வதாக புகார் எழுந்ததையடுத்து, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கடந்த 2013 -ம் ஆண்டு புகார் அளித்தார்.
அதன்படி, இந்த நிதி நிறுவனம் மற்றும் துணை நிதி நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் ஆகிய 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
Rediff
20 ஆண்டுகள் சிறை
இதனைத்தொடர்ந்து, கடந்த 2020 -ம் ஆண்டு நீதிமன்றத்தில் நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
அப்போது, விசாரணையின் போதே மோசடிக்கு சம்மந்தப்பட்ட நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். அப்பாதுரை, என்பவரை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
Rediff
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவ.20) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்பான சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகளும், ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் 9 பேருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ரூ.191.98 கோடி அபராதமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.180 கோடியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |