பின்லாந்து தேர்தல்: 3 ம் இடத்திற்கு தள்ளப்பட்ட பிரதமர் சன்னா மரின்: பெரும்பான்மை அமைவதில் சிக்கல்
பின்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி முதலிடம் பிடித்துள்ளது.
பின்லாந்து தேர்தல்
பின்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவின் இளம் வயது பிரதமராக அறியப்பட்ட சன்னா மரின்(37) அவரது இரண்டாவது தவணைக்காக தேர்தலில் களம் கண்டார்.
AP
பலமுனை போட்டியாக பார்க்கப்பட்ட பின்லாந்து நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடத்தப்பட்டது.
எண்ணப்பட்ட 97.7% வாக்குகளில் பெட்டேரி ஓர்போ(Petteri Orpo) தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி 20.7 % வாக்குகளை பெற்று வெற்றியை கைப்பற்றியுள்ளது.
அடுத்ததாக வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சி தி ஃபின்ஸ் 20.1% வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 19.9 % வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
BBC
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் சிரமம்
முதன்மையான மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட 20% வாக்குகளை பெற்று இருப்பதால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக வாக்குகளை பெற்ற மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சியின் தலைமையில் பின்லாந்தின் அடுத்த அரசாங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் 200 பிரதிநிதிகளுக்கான போட்டியில் மொத்தம் 2,400 போட்டியாளர்கள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
Bloomberg