இன்று நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் மற்றோரு ஐரோப்பிய நாடு!
பின்லாந்து இன்று நேட்டோவின் இராணுவக் கூட்டணியின் 31-வது உறுப்பினராகிறது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு இன்னும் நெருக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் செல்கிறது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் பின்லாந்து
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றொரு ஐரோப்பிய நாடான பின்லாந்தை கூட்டணியில் உறுப்பினராக சேர்க்கிறது.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஏப்ரல் 4 அன்று ஃபின்லாந்து கூட்டணியில் முழு உறுப்பினராகும் என்று அறிவித்தார். மார்ச் 30 அன்று துருக்கிய பாராளுமன்றம் நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
Konektus Photo/Shutterstock
ஒட்டுமொத்த நேட்டோவுக்கும் இது ஒரு நல்ல நாள்
திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டோல்டன்பெர்க், “இது ஒரு வரலாற்று வாரம். நாளை, நேட்டோவின் முப்பத்தொன்றாவது உறுப்பினராக பின்லாந்தை வரவேற்போம். பின்லாந்தை பாதுகாப்பானதாக்கி, நமது கூட்டணியை வலிமையாக்குவோம்" என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இங்கு நேட்டோ தலைமையகத்தில் முதன்முறையாக ஃபின்லாந்து கொடியை உயர்த்துவோம். பின்லாந்தின் பாதுகாப்புக்கும், நோர்டிக் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த நேட்டோவுக்கும் இது ஒரு நல்ல நாளாக இருக்கும்” என்று அவர் கூறினார். இதன் விளைவாக ஸ்வீடனும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
AP Photo
இரட்டிப்பாகும் ரஷ்யாவுடனான நேட்டோவின் எல்லை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நோர்டிக் தேசத்திற்கான இராணுவக் கூட்டணிக்கான விரைவான பயணத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து ரஷ்யாவுடன் 1,300 கிமீ (810 மைல்) எல்லையைக் கொண்டுள்ளது, அதாவது ரஷ்யாவுடனான நேட்டோவின் எல்லை இரட்டிப்பாகும்.
இந்த நடவடிக்கை ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் அதன் படைகளை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.